×

Terms & Conditions

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 

நீங்கள் தளத்தை உபயோகப்படுத்துவதற்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), அதனுடன் கூட நீங்கள் தளத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் / அல்லது சேவைகளுக்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) இந்த விதிமுறைகள் அனைத்தும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) பொருந்தும்.

இந்த தளம் GOGOX ஆல் அதன் குறிப்பிட்ட இயக்க இணைப்பு (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) மற்றும் அதனுடன் இணைந்த மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் (கூட்டாக, நாங்கள்”, “நாம்அல்லது எங்கள்”) இணைந்து அதிகாரம் அளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்யவும். இயங்குதளம் மற்றும் / அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக, (அ) நீங்கள் இந்தப் பகுதியில் சட்டப்பூர்வ வயதுடையவர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லையெனில் உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து நீங்கள் ஒப்புதல் பெற்றுள்ளீர்கள், (ஆ) நீங்கள் இதக் கவனமாகப் படித்துப் பார்த்தீர்கள், புரிந்து கொண்டீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையால் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) கட்டுப்பட்டு, நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, அதில் நீங்கள் கையெழுத்திட்டது முதல் இது நடைமுறையில் இருக்கும்.

இந்த விதிமுறைகள் மற்றும் / அல்லது எங்கள் தனியுரிமை கொள்கையுடன் நீங்கள் உடன்படவில்லை எனில், தயவுசெய்து இந்த செயலியை நிறுவ வேண்டாம் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), தேவைப்படும் போது நீங்கள் ஏற்கனவே நிறுவி இருந்த இந்த செயலியை நீக்கி விடுங்கள் அத்துடன் இந்த தளம் மற்றும் / அல்லது சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

 

1.  வரையறைகள் மற்றும் விளக்கம்

(a)  ​​இந்த விதிமுறைகளின் படி, வேறுவிதமாக வரையறுக்கப்படாமலோ அல்லது சூழல் வேறுவிதமாக இல்லாத வரை, கீழ்க்கண்ட வரையறைகள் மற்றும் விளக்க விதிகள் பொருந்தும்:

கணக்கு” என்பதற்கான விளக்கம் 5 (சி) (ii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது;

விளம்பரம்”என்பதற்கான விளக்கம் உங்கள் கணினி, மொபைல் சாதனம் அல்லது தளத்தின் செயல்பாட்டின் போது தோன்றக்கூடிய எந்தவொரு விளம்பர செய்திகளும் தகவல்களும், “விளம்பரங்களுக்கு” ஏற்பவும் உருவாக்கப்படும்;

மாற்றுப் பகுதி” என்பதற்கான விளக்கம் பிரிவு 10 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

செயலி”என்பது எங்களால் வழங்கப்பட்ட மொபைல் பயன்பாடு ஆகும். இதனை நீங்கள் உங்களுடைய மொபைல் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவலாம்  சேவைகளைப் பெறலாம்;

வாடிக்கையாளர்கள்” என்பது தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பங்கேற்பு வழங்குநர்களிடமிருந்து சேவைகளைக் கோரும் அல்லது பெறும் எந்தவொரு நபர்களையும் குறிக்கிறது. “வாடிக்கையாளர்“, “நீங்கள்” மற்றும் “உங்கள்” என்று குறிப்பிடப்படலாம்;

வைப்பு” என்பதற்கான விளக்கம் பிரிவு 4 (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ளது;

வாடிக்கையாளர் கடன்” என்பதற்கான விளக்கம் பிரிவு 5 (சி) (ii) இல் குறிப்பிடப்பட்டுளது;

அதிகபட்ச பொறுப்புத் தொகை என்பது USD140 (அல்லது அதற்கு சமமானதாக இருக்கும்);

இயங்குதளம் என்பது எந்தவொரு வாடிக்கையாளர் (கள்) மற்றும் / அல்லது பங்கேற்பு வழங்குநர் (கள்) மூலம் எங்கள் வலைத்தளம் (கள்) மற்றும் பிற தொடர்புடைய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளம் (கள்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது;

பங்கேற்பு வழங்குநர்கள்” என்பது தளத்தின் பயன்பாட்டின் மூலம் கோரப்படக்கூடிய நபர்கள், ஓட்டுநர்கள் அல்லது வாகன ஆபரேட்டர்கள், மற்றும் “பங்கேற்பு வழங்குநர்” அதற்கேற்பக் கருதப்படும்;

தனியுரிமைக் கொள்கை” என்பது 11 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளை கொண்டுள்ளது;

பகுதி” என்பதற்கான விளக்கம் நீங்கள் அணுகும் பகுதி அல்லது தளம் மற்றும் / அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் பகுதி என்பதாகும்;

தொடர்புடைய சட்டங்கள்என்பதற்கான விளக்கம் தளத்தில் மற்றும் / அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அவ்வப்போது அந்த பகுதியில் பொருந்தக்கூடிய ஏதாவது ஒரு சட்டம் மற்றும் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் என்பதாகும்;

சேவைகள்” என்பது எந்தவொரு வாடிக்கையாளர் (கள்) மற்றும் / அல்லது பங்கேற்பாளர் வழங்குநர்களுக்கு (கள்) நாங்கள் வழங்கிய ஏதாவது ஒரு அல்லது அனைத்து பொருட்களும் சேவைகளும் அந்தந்த தளத்தின் பயன்பாட்டின் மூலம் (பிரிவு 3 மற்றும் ஏதேனும் விவரிக்கப்பட்டுள்ள சேவைகள் உட்பட ஆனால் அவை மட்டுமல்ல) அட்டவணைகள் (ஏதேனும் இருந்தால்); மற்றும்

 “விதிமுறைகள்” என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குறிக்கிறது, அவை 10 வது பிரிவின் படி அவ்வப்போது திருத்தப்பட்டு கூடுதலாக வழங்கப்படலாம்.

(b)  தலைப்புகள் என்பது நாம் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக   மட்டுமே, அவை அதற்கான விளக்கத்தைப் பாதிக்காது. ஒருமையில் குறிப்பிடப்படும் விஷயங்களில் பன்மைக்கும் பொருந்தும், அதுபோலவே ஆண்பாலில் குறிப்பிடப்படுபவை பெண்பால் மற்றும் இருப்பலினத்தவருக்கும் பொருந்தும். ஏதாவது ஒன்றைக் குறிப்பிடும் போது, பின்வருவனவற்றைக் குறிப்பிடுவது, உள்ளிட்டவை, எடுத்துக்காட்டாக, அல்லது ஒத்த வெளிப்பாடு உட்பட, ஆகியவற்றைச் சேர்க்கும் போது இது கட்டுப்படுத்தாது.

(c) ஒரு நபர், நிறுவனம், அறக்கட்டளை, கூட்டாண்மை, இணைக்கப்படாத நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனம் போன்றவற்றை குறிப்பிடும் போது இது பொருந்தும்.

 

2.  இயங்குதளத்தின் உரிமம்

(a)  இந்த விதிமுறைகளை நீங்கள் ஒத்துக்கொண்டதற்கு இணங்க , செயலியின் ஒரு நகலை உங்கள் மொபைல் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவி அல்லது வேறுவிதமாக நீங்கள் பயன்படுத்தலாம். செயலியின் அத்தகைய நகலை இயக்கவும் வரையறுக்கப்பட்ட, பிரத்தியேகமற்ற, திரும்பப்பெறக்கூடிய மற்றும் மற்றவர்களுக்கு மாற்றித் தரமுடியாத உரிமத்தை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். இவை உங்களுடைய சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

(b)  இந்த விதிமுறைகளை நீங்கள் ஒத்துக் கொண்டதற்கு இணங்க, உங்கள் கணினி மற்றும் / அல்லது மொபைல் சாதனத்தில் அல்லது வேறுவிதமான முறையில் இந்த இயங்குதளத்தை அணுக / அல்லது பயன்படுத்த நாங்கள் உங்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.

(c)  எங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் (வரம்பில்லாதது, பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், லோகோக்கள், கிராபிக்ஸ், புகைப்படங்கள், அனிமேஷன்கள், வீடியோக்கள் மற்றும் உரை அல்லது உரிமைகள் மற்றும் இயங்கு தளத்தில் இருப்பவை உட்பட) அல்லது எங்கள் சில்லறை அல்லது விளம்பர கூட்டாளர்களின் அறிவுசார் சொத்துரிமை ஆகியவை பிரத்தியேகமற்ற மற்றும் மற்றவர்களுக்கு மாற்றித் தரமுடியாத தனிப்பட்ட உரிமையைத் தவிர, இந்த விதிமுறைகளுக்கு இணங்க சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் பெறுவதற்கும் பொருந்தும்.

(d)  நீங்கள் (i) எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவைக்கும் அல்லது இயங்கு தளத்திற்கும் எந்த வகையிலும் உரிமம், துணை உரிமம், விற்பனை, மறுவிற்பனை, பரிமாற்றம், ஒதுக்குதல், விநியோகித்தல் அல்லது வணிக ரீதியாகச் சுரண்டுவது அல்லது கிடைக்கச் செய்யாமல் தடுப்பது; (ii) சேவையகம் அல்லது இயங்கு தளத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள், படைப்புகளை மாற்றியமைத்தல் அல்லது உருவாக்குதல்; (iii) வேறு எந்த சேவையகம் அல்லது வயர்லெஸ் அல்லது இணைய அடிப்படை யிலான சாதனத்திற்கு இணைய “இணைப்புகள்” அல்லது “கட்டமைப்பு” அல்லது “பிரதிபலிப்புகள்” ஆகியவற்றை உருவாக்குதல்; (iv) தலைகீழ் பொறிமுறை அல்லது (1) ஒரு போட்டி தயாரிப்பு அல்லது சேவையை வடிவமைத்தல் அல்லது உருவாக்குதல், (2) சேவைகளின் ஒத்த மாதிரிகள், அம்சங்கள், செயல்பாடுகள், கிராபிக்ஸ் அல்லது பிற அறிவுசார் சொத்து தயாரிப்புகளைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பை அல்லது இயங்குதளத்தை வடிவமைத்தல் அல்லது உருவாக்குதல் (3) சேவைகள் அல்லது தளத்தில் இருக்கும் ஏதேனும் யோசனைகள், அம்சங்கள், செயல்பாடுகள், கிராபிக்ஸ் அல்லது பிற அறிவுசார் சொத்து தயாரிப்புகளை நகலெடுக்கவும்; அல்லது (v) வெப் ஸ்பைடர்ஸ், வெப் கிராளர்ஸ், வெப் ரோபோட்ஸ், வெப் ஆன்ட்ஸ், வெப் இன்டெக்ஸர்ஸ், போட்ஸ், வைரஸ்கள் அல்லது வர்ம்ஸ் அல்லது எந்தவொரு நிரல் உட்பட, ஆனால் அவை மட்டுமின்றி ஒரு தானியங்கி நிரல் அல்லது ஸ்கிரிப்டைத் தொடங்கவும், அல்லது எந்தவொரு நிரலும் வினாடிக்குப் பல சேவையக கோரிக்கைகளைச் செய்யலாம் அல்லது சேவைகள் அல்லது தளத்தின் செயல்பாடு மற்றும் / அல்லது தேவையற்ற செயல்திறனைக் கட்டுப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது.

 

3.  சேவைகள்

(a)  நாங்கள் தகவலை வழங்குவதற்கான தொழில்நுட்ப தளத்தையும், அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பங்கேற்பு வழங்குநர்களிடமிருந்துச் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறையையும் வழங்குகிறோம். பங்கேற்பு வழங்குநர்களுக்கு சேவைகளுக்கான கோரிக்கையை (அத்தகைய கோரிக்கையுடன் தொடர்புடைய தகவல்களுடன்) அனுப்ப இந்த தளம் உங்களை அனுமதிக்கிறது,  மேலும் இதுபோன்ற ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது நிராகரிக்கவோ அனைத்து பங்கேற்பு வழங்குநருக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. பங்கேற்பு வழங்குநர் ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், தளம் உங்களுக்கு அறிவிக்கும் மேலும் பங்கேற்பு வழங்குநரைப் பற்றிய தகவல்களையும் உங்களுக்கு வழங்கும், அதாவது பெயர், தொடர்பு எண், மதிப்பீடு, பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் விவரங்கள் (பொருந்தும் வகையில்) போன்றவற்றை அளிக்கும்.

(b)  உங்களுக்கும் பங்கேற்பு வழங்குநருக்கும் (கள்) இடையில் நாங்கள் ஒரு இடைத்தரகராக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள், நாங்கள் உங்கள் முகவரோ அல்லது பங்கேற்பாளர் வழங்குநரின் (கள்) முகவரோ கிடையாது. நாங்கள் ஒரு போக்குவரத்து கேரியர் அல்ல, போக்குவரத்து சேவைகளையும் வழங்குவது இல்லை. பங்கேற்பு வழங்குநரின் (கள்) ஒழுக்கம், அலட்சியம், நடத்தை, செயல்கள் அல்லது செயலின்மை ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், (தளம் மூலம் அல்லது வேறு). அதன் சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். சேவைகளை வழங்குவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் உங்களுக்கும் பங்கேற்பு வழங்குநருக்கும் (கள்) இடையில் மட்டுமே உள்ளது, இதற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பிரிவு 5 இன் படி கட்டண ஏற்பாடு சேவைகளை வழங்குவதைத் தவிர, உங்களுக்கும் எந்தவொரு பங்கேற்பு வழங்குநருக்கும் (கள்) இடையில் இருக்கும் (இருக்கக்கூடிய) எந்தவொரு உடன்படிக்கைக்கும் நாங்கள் ஒருபோதும் பொறுப்பு ஏற்க மாட்டோம். வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக ஏதேனும் தகராறு இருந்தால், அந்த சர்ச்சையை நீங்கள் சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர் வழங்குநர்களுடன் நேரடியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

(c)  தளம் மற்றும் / அல்லது சேவைகளுக்கான அணுகல் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு வழங்கக்கூடிய எந்தவொரு பயனர்பெயர் அல்லது கடவுச்சொல்லையும் எந்த மூன்றாம் தரப்பினருக்குத் தெரியப்படுத்தக் கூடாது, நீங்கள் அதைப் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும்.

(d)  உங்கள் மொபைல் சாதனம், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் நீங்கள் அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர் என்று நாங்கள் கருதுவோம்

 

4.  நீங்கள் பயன்படுத்தும் தளம் மற்றும் சேவைகளின் உபயோகம்

(a)  நீங்கள் தளத்தின் பயனராகப் பதிவுசெய்ததும் நாங்கள் உங்களுக்காக ஒரு கணக்கை அளித்ததும் உங்களின் தளம் மற்றும் சேவைகளுக்கான அணுகல் நிபந்தனைக்குட்பட்டு பயன்படுத்தலாம்.

(b)  பொருத்தமான இடங்களில், நீங்கள் உபயோகிக்கும் தளம் மற்றும் சேவைகளுக்கான அணுகல் போன்றவை உங்களுடைய கணக்கில் அவ்வப்போது எங்களின் கோரிக்கையின்படி வேண்டிய அளவு வைப்புத்தொகையை நிபந்தனைகளின் படி (வைப்புத்தொகை) வைத்திருக்க வேண்டும். தளம் மற்றும் சேவைகளுக்கான உங்களுடைய உபயோகம் மற்றும் அணுகலைத் தொடருவதற்கு முன், அவ்வப்போது அறிவிக்கப்படும் கூடுதல் தொகையை வைப்புத்தொகையாக எங்கள் அல்லது எங்களுடைய நியமனதாரராக நியமிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதன் வாயிலாக அல்லது அவ்வப்போது எங்களால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மற்ற கட்டணச் சான்றுகளை  எங்களிடம் அளிப்பதன் வாயிலாகவும் நீங்கள் அவ்வப்போது பணத்தை வைப்புச் செய்யலாம். உங்களுக்குச் சம்மந்தப்பட்ட  கட்டணச் சான்றுகள் மற்றும் / அல்லது இதர சேவைகளை உறுதிசெய்யவும்/ அல்லது சரிபார்க்கவும் எங்கள் உதவி  வேண்டுமென்றால் உங்களிடம் நிர்வாகக் கட்டணம் வசூலிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது  (நீங்கள் இந்த  விதிகளில் ஏதேனும் ஒன்றை மீறியதன் காரணமாக அல்லது உங்களின் கருத்துப்படி நீங்கள் தளம் மற்றும் / அல்லது  சேவைகளை தவறாக உபயோகப்படுத்தினால் உங்களுடன் சம்மந்தப்பட்ட கணக்கை இடைநீக்கம் அல்லது நிறுத்துதல் உட்பட). எங்கள் இணையதளம் மற்றும் / அல்லது தளத்தில் எங்களுடைய நிர்வாகக் கட்டணங்களின் விவரங்கள் அவ்வப்போது   காணலாம். சந்தேகத்தை நீக்குவதற்காக, வைப்புத்தொகையாக வைப்பு செய்யப்படும் எந்தவொரு தொகைக்கும் வட்டி அளிக்கப்படமாட்டாது, அதை நீங்கள் பரிமாற்றம் செய்ய முடியாதது மற்றும் அதன் ஒரே மற்றும் முக்கியமான நோக்கம் எந்தவொரு நிகழ்விலும் தளத்தின் சேவைகளைப் பெறுவதற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. நீங்கள் சம்மந்தப்பட்ட கணக்கை முடித்தவுடன்,  வைப்புத்தொகையாக வைப்பு செய்யப்பட்ட எந்தவொரு தொகையும் (அனைத்து செலுத்த வேண்டிய மற்றும் / அல்லது  செலுத்தாமல் நிலுவையில் இருக்கின்ற கட்டணங்கள், நிர்வாகக் கட்டணங்கள் என்று (ஏதேனும் இருந்தால்) மற்றும் / அல்லது  மாதாந்திர விலைப்பட்டியல் (கள்) (உடன் சேர்ந்து) தாமதமாக மற்றும் / அல்லது இயல்புநிலை கட்டணம் செலுத்துவதற்கு அப்படி (ஏதேனும் இருந்தால்)) அதற்கான வட்டியானது உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

(c)  நீங்கள் உடன்படுகிறீர்கள்:

(i)  தளத்தில் கணக்கைப் பதிவு செய்யு நாங்கள் கேட்டக்கூடிய எல்லா விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும்;

(ii)  நாங்கள் நியாயமான முறையில் கேட்கக்கூடிய உங்களுடைய அடையாளத்திற்கான எந்தவொரு ஆதாரத்தையும் எங்களுக்கு வழங்க வேண்டும்;

(iii)  எங்களால் அளிக்கப்பட முடிக்கப்பட்ட ஆர்டர்கள் மற்றும் / அல்லது விலைப்பட்டியல்களின் படி பெறத்தக்க அல்லது செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

(iv)  தளத்தில் உங்களுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்ட பங்கேற்பு வழங்குநர்களை அவர்களின் வாகனங்கள் மற்றும் / அல்லது சேவைகளைப் உபயோகப்படுத்தும் போது மரியாதையுடன் நட்ந்துக்க் கொள்ளுதல், அவர்களுடைய வாகனங்களுக்கு சேததத்தை ஏற்படுத்துவதும் அல்லது எந்தவொரு சட்டத்திற்கு புறம்பான செயல்கள், அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தை அல்லது செயல்பாட்டில் ஈடுபடக்கூடாது.

(v)  எங்களுடைய பணியாளர்களாகிய உறுப்பினர்களை (நபர்களை) (ஆனால் எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவில் உள்ள எந்தவொரு நபரையும் நபருடனும் உள்ளடக்கியது) மரியாதையுடன் நடந்துவது, எந்தவொரு நிலையிலும், எங்கள் ஊழியர்களை அச்சுறுத்தல், கோபமாக பேசுதல் அல்லது தவறான நடத்தை ஆகியவற்றை செய்யாமல் இருக்க வேண்டும்;

(vi)  மற்ற வாடிக்கையாளர் (களின்) கணக்கை (களை) அணுகவோ அல்லது பிற வாடிக்கையாளர் (களின்) கணக்கு (களை) அணுக முயற்சிக்கவோ, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஊடுருவவோ அல்லது ரத்து செய்யவோ முயற்சிக்கவும், நீங்கள் தளம் மற்றும் / அல்லது சேவைகளை; அல்லது மூன்றாம் தரப்பு அல்லது உங்களுடைய சொந்த பொருள் (கள்) மற்றும் / அல்லது சேவை (கள்) ஆகியவற்றை விளம்பரப்படுத்த அல்லது ஊக்குவிக்க; உபயோகப்படுத்தவும் கூடாது.

(vii)  நீங்கள் எங்களுக்கு அளித்த எல்லா தகவல்களும் விவரங்களும் (தளத்தின் வாயிலாகவோ அல்லது வேறுவிதமாகவோ உட்பட) அனைத்து வகையிலும், நேரங்களிலும்;உண்மையானவை, சரியானவை, முழுமையான மற்றும் புதுப்பிக்கபட்டவை என்று உத்திரவாதம் அளிக்க வேண்டும்;

(viii)  நீங்கள் தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்த மாட்டீர்கள்: (i) தொடர்புடைய சட்டங்களை மீறி பொருட்கள் மற்றும் / அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தளம் மற்றும் / அல்லது சேவைகளை உள்ளடக்கிய ஆனால் அவை மட்டுமின்றி எந்தவொரு சட்டத்திற்கு புறம்பான நோக்கத்திக்காகவும்; மற்றும் (ii) தளம் அல்லது சேவைகளை குறைந்த செயல்திறன் கொண்ட குறுக்கீடு, சேதம், பாதிப்பு அல்லது அளித்தல்; என்று உறுதி அளிக்கிறீர்கள்.

(ix)  தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்தும் போது சம்மந்தப்பட்ட எல்லா சட்டங்களுக்கும் இணங்க வேண்டும்;

(x)  தொந்தரவு செய்தல், கோபமூட்டுதல் அல்லது சிரமத்தை ஏற்படுத்துவதற்காக நீங்கள் தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்த மாட்டீர்கள்;

(xi)  அவமதிக்க கூடியது அல்லது எங்கள் நற்பெயருக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டது என்று நாங்கள் எண்ணக்கூடியம் எதையும் செய்வதைத் தவிர்ப்பது; மற்றும்

(xii)  இந்த விதிகள் மற்றும் / அல்லது சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை நீங்கள் மீறியதன் காரணமாக, இங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும், இல்லை என்றாலும், பிற எந்தவொரு நபரும் எங்களுக்கு மாறாக கூறிய எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கும் எதிராக எங்களுக்கு முழுமையாக ஈடுசெய்யவும் பாதுகாக்கவும் வேண்டும்.

(d)  உங்களிற்கான தளம் மற்றும் / அல்லது சேவைகளுக்கான அணுகலை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவைக்க, கட்டுப்படுத்த அல்லது நிறுத்த கூட உரிமையானது எங்களுக்கு உண்டு. (i) இந்த விதிமுறைகளை ஏதேனும் ஒன்றை நீங்கள் மீறி நடந்துள்ளீர்கள் என்று நம்புவதற்கு எங்களுக்கு எதும் நியாயமான காரணங்கள் இருக்கின்றது அல்லது எங்களுடைய எண்ணப்படி நீங்கள் தளம் அல்லது சேவைகளை தவறாக உபயோகப்படுத்துக்கிறீர்கள்; மற்றும் / அல்லது (ii) நீங்கள் அனைத்து கட்டணங்கள் மற்றும் / அல்லது எங்களுடைய விலைப்பட்டியல் (களை) சரியாக செலுத்த தவறிவிட்டீர்கள். எங்களுடைய உரிமைகள் அல்லது பிற நபரின் உரிமைகளையும் பாதுகாப்பது சரியானது என்று நாங்கள் கருதக்கூடிய உங்களுக்கு மாறாக வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்காக எங்கஎங்களுடைய உரிமையை இது கட்டுப்படுத்தாது.

 

5.  கட்டணங்கள் மற்றும் பணம் செலுத்துதல்

(a)  ​​தளத்தை பொதுவாக உபயோகப்படுத்துவதற்கு எந்த கட்டணமும் கிடையாது. பங்கேற்பு வழங்குநர்களால் அளிக்கப்பட சேவைகளின் விலைக் குறித்த தகவல்களுக்கு, எங்களுடன் எழுத்துப்பூர்வமாக உடன்படாவிட்டால், தயவுசெய்து எங்களுடைய இணையதளம் மற்றும் / அல்லது தளத்தில் பதிவிட்ட சமீபத்திய விலை வழிமுறைகளைக் காணவும், எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் அவ்வப்போது, அவை எங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் திருத்தம் செய்யப்படு புதுப்பிக்கப்படலாம். எழுத்துப்பூர்வமாக எங்களால் ஒப்புக் கொள்ளப்படாவிட்டால், இந்த பிரிவு 5 இன் கீழ் எந்தவொரு கட்டணமும் திருப்பிச் செலுத்தப்படாது.

(b)  பணமாக செலுத்துதல்: முடிக்கப்பட்ட ஆர்டர்களின் கீழ் பெறவேண்டிய அல்லது செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் உங்களுக்கும் பங்கேற்பு வழங்குநருக்கும் (கள்) நேரடியாக கொடுக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு உடன்படுகிறீர்கள். கட்டணங்களை கொடுப்பது சம்பந்தமாக ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அத்தகைய கருத்து வேறுபாடு தொடர்புடைய பங்கேற்பு வழங்குநரிடம் நேரடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்; மற்றும்

(c)  பணமாக இல்லாமல் பிற முறைகளில் செலுத்துதல்:

(i)  முடிக்கப்பட்ட ஆர்டர்களின் கீழ் பெற வேண்டிய அல்லது செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்துதல் அல்லது அவ்வப்போது எங்களால் ஒப்புதல் வழங்கப்படப் பிற பணமற்ற முறை வாயிலாகக் கொடுக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள் (மற்றும் நீங்களும் பங்கேற்பு வழங்குநருக்கும் (கள்)இடையில் நேரடியாகத் தொடர்பு இல்லை). உங்களின் சார்பாகப் பங்கேற்பு வழங்குநருக்கு (கள்) அத்தகைய கட்டணங்களைச் செலுத்த நீங்கள் உங்கள் கட்டண முகவராக ரத்து செய்யாமல் அங்கீகாரம் அளிக்கிறீர்கள், மற்றும்

(ii)  பொருந்தக்கூடிய இடங்களில், உங்களுடைய வெர்ச்சுவல் வாலெட் கணக்கிலிருந்து (“கணக்கு”) தொடர்புடைய தொகை கடனை (“வாடிக்கையாளரின் கிரெடிட் (கள்)” கழிப்பதன் வாயிலாக முடிக்கப்பட்ட ஆர்டர்களின் கீழ் பெறத்தக்க அல்லது செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணமும் தீர்க்கப்படலாம். பொருந்தக்கூடிய இடங்களில், வாடிக்கையாளர்களின் கிரெடிட்களின் கழித்தல் முறை மற்றும் தொகை மற்றும் சம்மந்தப்பட்ட நிர்வாகக் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்) எங்கள் தளத்தில் வெளியிடப்படும், மேலும் உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட உடன் உடனடியாக செயல்படும். அவ்வப்போது எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் திருத்தப்பட்டபடி, வாடிக்கையாளர் கிரெடிட் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்) கழித்தல் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை அத்தகைய அறிவிப்புக்குப் பின்னர் நீங்கள் தொடர்ந்து அணுகலாம் அல்லது உபயோகப்படுத்தலாம். அவ்வப்போது எங்களுடைய அறிவுரையின்படி நீங்கள் எந்த விதத்திலும் வாடிக்கையாளர் கிரெடிட்டை வாங்கலாம், டாப் அப் செய்யலாம், பரிமாறிக்கொள்ளலாம் அல்லது மீட்டெடுக்கலாம்.  சந்தேகத்தை நீக்குவதற்காக; (i) வாடிக்கையாளர் கிரெடிட்கள் பரிமாற்றம் செய்ய முடியாதவை மற்றும் அவற்றின் ஒரே  மற்றும் பிரத்தியேகமான எண்ணம் பங்கேற்பு வழங்குநர் (கள்) வழங்கும் சேவைகளுக்கான கோரிக்கை; (ii) வாடிக்கையாளர் கிரெடிட்களை வாங்குவதற்கு உபயோகப்படுத்தப்படும் எந்தவொரு பணமும் எந்தவொரு நிகழ்விலும் திருப்பித் தரப்படாது;  மற்றும் (iii) சம்மந்தப்பட்ட சட்டங்களால் வெளிப்படையாகத் தடைசெய்யப்படாவிட்டால், வாடிக்கையாளர் வரவுசெலவுத் திட்டங்கள் எங்கள் தளத்தில் வாங்கிய தேதி, டாப் அப், பரிமாற்றம் அல்லது மீட்டுதல் போன்றவற்றிலிருந்து காலாவதியாகும்.

(d)  ஒத்திவைக்கப்பட்ட பணம் செலுத்துதல்: தகுந்த இடங்களில், முடிக்கப்பட்ட சில ஆர்டர்களின் கீழ் பெறத்தக்க அல்லது செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஒரு கால வரையறைக்குள் செலுத்த அனுமதிக்கலாம் (அவ்வப்போது எங்கள்  சொந்த விருப்பத்தின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது). எங்களுடைய தரகு மற்றும் / அல்லது நிர்வாகக் கட்டணங்களுடன்  (பொருந்தும் விதத்தில்) சம்மந்தப்பட்ட காலகட்டத்தில் உங்களுக்குத் தளத்தில் பங்கேற்பு வழங்குநர் (கள்) அளித்த எந்தவொரு  சேவைகளுக்கும் செலுத்த வேண்டிய மொத்த கட்டணம் தொடர்பான விலைப்பட்டியல் (களை) நாங்கள் உங்களுக்குக்   கொடுப்போம்.  எங்களுடைய விலைப்பட்டியல் (களில்) குறிப்பிட்டுள்ள படி குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டிய  தேதிக்கு பின்னர் சம்மந்தபட்டு கட்டணங்களை முழுவதுமாக செலுத்த உடன்படுகிறீர்கள், விலைப்பட்டியல் (கள்)  தாமதமாகவோ அல்லது இயல்புநிலையாகவோ தீர்வு காணப்பட்டால், நாங்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதை நீங்கள்  மேலும் புரிந்துகொண்டு உடன்படுகிறீர்கள்; (i) விலைப்பட்டியல் (கள்) தாமதமாகவோ அல்லது இயல்புநிலையாகவோ சரி  செய்வது தொடர்பான அனைத்து தொடர்புடைய செலவுகளையும் உங்களிடமிருந்து வசூலிக்கவும் வசூலிக்கவும்; மற்றும் ii) உங்கள் சம்மந்தப்பட்ட கணக்கை நிறுத்தவும் அல்லது இடை நிறுத்தவும்:

(e)  சந்தேகத்தை நீக்குவதற்காக, நீங்கள் குறிப்பிட்ட பணமில்லா கட்டணம் செலுத்தும் சேனல் சீர்குலைந்துவிட்டால் அல்லது தீர்வு நேரத்தில் கிடைக்கவில்லை எனில், பங்கேற்பு வழங்குநருக்கு (கள்) பணத்தின் வாயிலாக உடனடியாக சம்பந்தப்பட்ட முடிக்கப் பெற்ற ஆர்டரை (களை) உடனடியாக தீர்த்துக்கொள்வீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு உடன்படுகிறீர்கள்.

 

6.  விளம்பரங்கள்

நாங்கள் தளத்தில் அவ்வப்போது விளம்பரங்களை வெளியிடலாம். முழுவதுமாக அல்லது பகுதியாக இருந்தாலும், அது போன்ற விளம்பரங்களையும் எந்தவித முன் அறிவிப்பின்றி எங்களுடைய முழு சம்மதத்தின் படி திருத்தம் செய்ய, இடைநீக்கம் செய்ய,  திரும்பப் பெற அல்லது நிறுத்தக்கூடிய உரிமை எங்களுக்கு உண்டு. நீங்கள் மதிப்பீடு செய்தாலும் செய்யாவிட்டாலும்,  சமீபத்திய விளம்பரங்களுடன் சேவைகளை நீங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்துவது, அது போன்ற விளம்பரங்களுக்கு உங்கள் சம்மதத்தையும் ஏற்றுக்கொள்ளலையும் உருவாக்கும். எங்கள் தொழில்நுட்ப சாதனங்கள், விளம்பர சலுகைகள் மற்றும் தகுதிவாய்ந்த ஊழியர்கள் போட்டியான சந்தை விலைகளைக் குறிக்கும், அவை சம்மந்தப்பட்ட சட்டங்களின்படி கணக்கிடப்பட்டு முன்மொழியப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள்.  எங்களுடைய விளம்பர சலுகைகள் உங்கள் மற்றும் பங்கேற்பு வழங்குநரின் சிறந்த திருப்தியின் நோக்கத்திற்காக மட்டுமே. நாங்கள் சந்தேகம் அடைவதை தவிர்ப்பதற்காக,  தளத்தில் நீங்கள் மற்றும் பங்கேற்பு வழங்குநர்கள் உள்ளிட்ட எந்தவொரு பரிவர்த்தனையையும் நேரடியாகத்  தலையிடலாம், பாதிக்கலாம், ஏற்பாடு செய்யலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் வகையில்  எங்களுடைய விளம்பர சலுகைகள் பிரதிபலிக்காது அல்லது கட்டுப்படுத்தப்படாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.  விளம்பரத்திற்கான சலுகைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து எங்களுடைய அமலில் இருக்க கூடிய முன்மொழியப்பட்ட விளம்பர சலுகைகளுடன் தளம் மூலமாக ஒரு சேவையை கோரிக்கை செய்ய வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

 

7.  இணைப்புகள் மற்றும் விளம்பரங்கள்

தளத்தில் மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கான விளம்பரங்களும், கட்டண சேனல்களுக்கான விளம்பரங்களின்  இணைப்புகளும் இருக்கலாம். எந்தவொரு விளம்பரத்தினுடைய உள்ளடக்கங்களுக்கும் துல்லிய தன்மைக்கும் நாங்கள்  பொறுப்பேற்க மாட்டோம். மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கான விளம்பரங்களும், கட்டண சேனல்களுக்கான விளம்பரங்களின் எந்தவொரு இணைப்பும் உங்களுடைய வசதிக்காக மட்டுமே அளிக்கப்படுகின்றன, ஆனால் இதுமாதிரியான மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் கட்டண சேனல்களில் உள்ள உள்ளடக்கங்களுக்கு எங்களால் ஒப்புதல் அளிக்க முடியாது. இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு இணையதளங்கள், கட்டண சேனல் அல்லது விளம்பரத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் அதை முழுவதுமாக உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் செய்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது விளம்பரதாரர்களுக்கும் அல்லது மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் / அல்லது கட்டண சேனல் இயக்குபவர்களுக்கு  இடையேயான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எந்தவொரு சேதத்தையோ, இழப்புகளையோ அல்லது பிற உரிமைக் கோரிக்கைகளை அணுகுவதன் வாயிலாகவோ அல்லது அல்லது வேறு எந்த தளத்திலோ அல்லது அதன் வாயிலாகக் கிடைக்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் நம்பியிருப்பதை உபயோகப்படுத்துவதன் வாயிலாகவோ அல்லது ஆதாரத்தின் வாயிலாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்  என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், உடன்படுகிறீர்கள்.

 

8.  இழப்பீடு

இந்த விதிமுறைக்கு உடன்படுவதன் வாயிலாகவும், தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்துவதன்  வாயிலாகவும், எங்களை, எங்களுடைய துணை நிறுவனங்கள், உரிமதாரர்கள் மற்றும் எங்கள் ஒவ்வொருவருக்குமான  அதிகாரிகள், இயக்குநர்கள், பிற பயனர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து உரிமைகோரல்கள், விலைகள்,  சேதங்கள், இழப்புகள், (வழக்கறிஞரின் கட்டணம் மற்றும் செலவுகள் உட்பட) அல்லது அதற்கு எதிராக எழுகின்ற: (அ) ​​இந்த விதிகள் அல்லது எந்தவொரு சம்மந்தப்பட்ட சட்டங்களின் மீறல் அல்லது அத்துமீறல்,  இங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்; (ஆ) தளத்தின் மூலமாக தயார் செய்யப்பட்ட பங்கேற்பு வழங்குநர்கள் உட்பட எந்த மூன்றாம் தரப்பினரின் எந்தவொரு உரிமைகளையும் நீங்கள் மீறுவது; அல்லது (இ) தளம் மற்றும் / அல்லது  சேவைகளில் உங்கள் உபயோகம் அல்லது தவறான பயன்பாடு ஆகியவை இழபீட்டிற்குப் பொருந்தும்.

 

9.  மறுப்பு

(a)  ​​தளம் உங்களுக்கு “உள்ளது போலவே” அடிப்படையில் அளிக்கிறது. தளமானது உங்களுடைய கணினி அல்லது மொபைல் ஃபோனுடன் இணக்கமாக அல்லது (உள்ளடக்கத்தின்) தளம் மற்றும் எங்களுடைய இணையதளம் பிழைகள், குறைபாடுகள்,  மால்வேர் மற்றும் வைரஸ்கள் இல்லாமல் அல்லது புதுப்பித்த நிலையிலும் துல்லியமான நிலையிலும் சரியாக இருக்கிறது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை.

(b)  சேவைகளின் கிடைப்பது தொடர்பாக, சேவைகளை உபயோகப்படுத்துவதன் வாயிலாக பங்கேற்பு வழங்குநர்களிடமிருந்து போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள் கிடைப்பது தொடர்பாக, சேவைகளின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்ட தகவல் அல்லது தரவின் துல்லியத்தன்மை அல்லது பங்கேற்பு வழங்குநர்களின் சேவைகளின் தரம், பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நேரமின்மை தொடர்பாக நாங்கள் எந்தப் பொறுப்பும் உத்தரவாதமும் அளிக்கவில்லை.

(c)  மேலே குறிப்பிடப்பட்டுக் காட்டப்பட்ட எந்தவொரு பிக்-அப் அல்லது பயண நேரங்களும் சிறந்த மதிப்பீடுகள் மட்டுமே, ஒரு பிக்-அப் அல்லது பயண நேரமானது அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட எந்தவொரு மதிப்பீட்டையும் மீறினால் அல்லது  உங்களுடைய எதிர்பார்ப்புகளை மீறினால், எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது நீங்கள் மற்றும் / அல்லது எந்தவொரு பங்கேற்பு வழங்குநரால் கொண்டு செல்லப்பட வேண்டிய பொருட்கள் இலக்கை அடைவது அல்லது அதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக எந்த ஒரு பிரச்சனைக்கும் நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.

(d)  தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பு வழங்குநர்களின் வாகனங்கள் அல்லது மொபைல் சாதனங்கள் ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனம் மற்றும் / அல்லது / மற்றும் இருப்பிட கண்காணிப்பு மென்பொருள் அல்லது தொழில்நுட்பத்துடன் நிறுவப்படலாம். இதுபோன்ற வாகனங்கள் அல்லது மொபைல் சாதனங்கள் ஜி.பி.எஸ் அல்லது பிற இருப்பிட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன. இருப்பிட கண்காணிப்பு அம்சத்தில் எந்தவித தவறும் இருக்காது என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு உடன்பட்டுள்ளீர்கள், ஒருவேளை அந்த சாதனம் அளிக்கும் விவரங்கள் சரியாக இல்லாமலும் இருக்கலாம். இருப்பிட கண்காணிப்பு அம்சத்தின் உங்களுடைய உபயோகம் உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே உள்ளது, மேலும் இதுபோன்ற எந்தவொரு உபயோகமும் மற்றும் / அல்லது நீங்கள் இருப்பிட கண்காணிப்பு விவரங்களை நம்பியிருப்பது தொடர்பாக எந்தவொரு பொறுப்பையும் எங்களால் ஏற்க முடியாது.

(e)  உங்களுடைய மதிப்புமிக்க, தனிச்சிறப்பு மிக்க அல்லது வேறு ஏதேனும் பொருட்களுக்கு தகுந்த காப்பீடு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்வது உங்களுடைய முழுப் பொறுப்பாகும். பயணத்தின் போது பங்கேற்பு வழங்குநர்களின் வாகனங்களுக்குள் பொருட்கள் தொலைந்து போனால், அந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்கத் தொடர்புடைய பங்கேற்பு வழங்குநருடன் தொடர்பு கொள்ள நியாயமான முயற்சிகளை மேற்கொள்வோம், எழுத்துப்பூர்வமாக நாங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட, அத்தகைய எந்தவொரு பொருளையும் தொலைந்தால் அல்லது சேதமடைந்தால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

(f)  தளத்தை உபயோகப்படுத்துவதன் வாயிலாக ஒரு இடத்தில் இருந்து மாற்ற இடத்திற்கு மற்றும் / அல்லது அளிக்கப்பட்ட பொருட்கள் சம்மந்தப்பட்ட எந்தவொரு பொறுப்பிற்கும் நாங்கள் உத்தரவாதம் வழங்க மாட்டோம். எங்களால் அத்தகைய உடமைகளுக்குச் சேதம் உண்டாக்குவதால் எழும் எந்தவொரு உரிமைகோரலும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்படாவிட்டால், பங்கேற்பு வழங்குநருக்கும் தொடர்புடைய வாடிக்கையாளருக்கும் இடையில் இவை கையாளப்பட வேண்டும்.

(g)  தளம் மற்றும் / அல்லது சேவைகளின் உங்களுடைய உபயோகம் சம்மந்தப்பட்ட சட்டங்களுக்கு ஏற்று நடப்பதை உறுதிப்படுத்துவது உங்களின் முழு பொறுப்பாகும். சம்மந்தப்பட்ட சட்டங்களுக்கு இணங்காத தளம் மற்றும் / அல்லது சேவைகளின் எந்தவொரு உபயோகமும் எங்களால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, கோரப்பட்ட அல்லது வேறுவிதமாக அங்கீகரிக்கப்படமாட்டாது. சம்மந்தப்பட்ட சட்டங்களுக்கு இணங்காத தளம் மற்றும் / அல்லது சேவைகளின் உங்களுடைய உபயோகத்திலிருந்து எழும் அல்லது தொடர்புடைய எல்லா பொறுப்புகளையும் நாங்கள் மறுக்கிறோம்.

(h)  தளம் மற்றும் / அல்லது சேவைகளின் உபயோகம் உங்களுடைய விருப்பத்தின் பேரில் உள்ளது. பொருத்தமான சட்டத்தால் அனுமதியளிக்கப்பட்ட முழு அளவிற்கும், எழுத்துப்பூர்வமாக எங்களால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்துவதோ அல்லது இயலாமையோ ஏற்படுவதால் உண்டாகும் எந்தவொரு சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். (எந்தவொரு இழப்பு, மறைமுக அல்லது எதிர்பாராத சேதங்கள் அல்லது உங்களுடைய கணினி அல்லது ஃபோனுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதங்கள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்ல). மேலே குறிப்பிடப்பட்டுளவைக்கு, எந்தவித பாரபட்சமும் இன்றி, தகுந்த சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டால், எங்களின் மொத்த பொறுப்பும் எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகபட்ச பொறுப்புத் தொகையை அல்லது எங்களால் பராமரிக்கப்படும் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப (ஏதேனும் இருந்தால்) திரும்ப பெறக்கூடிய தொகையை மீறாது.

 

10.  விதிமுறைகள் மற்றும் சேவைகளை மாறுதல் செய்தல்

நாங்கள் எங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் இந்த விதிமுறைகளில் உள்ள ஏதேனும் ஒன்றை அவ்வப்போது திருத்தம் செய்தல் அல்லது சிறிது மாற்றியமைத்தல் அல்லது முழுமையாக மாற்றியமைத்தல், ஏனெனில் இது பொருத்தமானது, அல்லது மாற்றுவது,  இடைநீக்கம் செய்யப்படுகிறது அல்லது தளத்தில் மற்றும் / அல்லது சேவைகளை தளத்தின் மூலமாக உங்களுக்கு அறிவிப்பை  அனுப்புவதன் வாயிலாக அல்லது எங்களுடைய இணையதளத்தில் ஒரு அறிவிப்பை பதிவிடுவதன் மூலம் நிறுத்தவும், இது அறிவிப்பு அல்லது இடுகையிடும்போது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் சில அம்சங்கள் மற்றும் சேவைகளுக்கு வரையறைகளை விதிக்கலாம் அல்லது அறிவிப்பு அல்லது பொறுப்புடமை இல்லாமல் பகுதி அல்லது அனைத்து  சேவைகளுக்கான உங்களுடைய அணுகலை கட்டுப்படுத்தலாம். விதிமுறைகளை தவறாமல் ஆய்வு செய்வது உங்களுடைய  பொறுப்பாகும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், உடன்படுகிறீர்கள், நீங்கள் சேவையை உபயோகப்படுத்தும் எந்தவொரு பிராந்தியத்திற்கும் பொருந்தும் விதிமுறைகள், நீங்கள் தளத்தில் பதிவுசெய்த பிராந்தியத்திலிருந்து (“வேறு மண்டலம்)  வேறுபடலாம், அதன்பிறகு தொடர்ந்தது அது போன்ற மாறுதல்களுக்குப் பின்னர் சேவையை உபயோகப்படுத்துவது, நீங்கள் மதீப்பிடு செய்தாலும் செய்யாவிட்டாலும், அத்தகைய மாற்றங்களுக்கு உங்கள் சம்மதத்தையும் ஏற்றுக்கொள்ளலையும்  உருவாக்கும். வேறு பிராந்தியத்தில் சேவைகளின் உபயோகம் மாற்றுப் பிராந்தியத்தில் நிலவும் விதிமுறைகளுக்கு உட்பட்டது  என்பதை நீங்கள் மேலும் ஏற்றுக்கொள்கீறீர்கள்.

 

11.  தனிப்பட்ட தரவு மற்றும் தனியுரிமை

ங்களுடைய தனிப்பட்ட தரவினுடைய சேகரிப்பு, உபயோகம், சேமிப்பு, செயல்முறை மற்றும் மாற்றம் செய்வது  என்பது பொதுவாக எங்களின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டவை ஆகும், எங்களுடைய இணையதளத்தில் இதனின் சமீபத்திய பதிப்பானது  இருக்கின்றது. எங்களுடைய சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்று நாங்கள் நினைப்பதால், எங்களுடைய தனியுரிமைக்  கொள்கை, அவ்வப்போது திருத்தம் செய்து புதுப்பிக்கப்படலாம், இந்த விதிமுறைகளில் குறிப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது.  தனியுரிமைக் கொள்கையை தவறாமல் ஆய்வு செய்வது உங்களுடைய பொறுப்பாகும் என்பதையும், நீங்கள் வேறு பிராந்தியத்திற்கு ஏற்ற தனியுரிமைக் கொள்கையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், உடன்படுகிறீர்கள், அதன் பின்னர், இதுபோன்ற எந்த மாறுதல்களுக்கும் பின்னர் சேவையை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, நீங்கள் மதிப்பீடு செய்தாலும் செய்யாவிட்டாலும்,  உங்கள் சம்மதத்தை உருவாக்கும் அத்தகைய மாறுதல்களுக்கு உடன்படுவது. வேறு பிராந்தியத்தில் சேவைகளின் உபயோகம் வேறு பிராந்தியத்தில் நிலவும் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

 

12.  மற்றவை

(a)  உரிமை மாற்றம். இந்த விதிகளின் படி உங்களுடைய உரிமைகள் அல்லது கடமைகளை, எங்களுடைய எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நபருக்கும் நீங்கள் ஒப்படைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. இந்த விதிகளின் படி எங்களது உரிமைகள் மற்றும் கடமைகளை நாங்கள் எந்தவொரு தரப்பினருக்கும் ஒப்படைத்து உரிமை மாற்றம் செய்யலாம் மேலும் அத்தகைய உரிமை மாற்றம் அல்லது இடமாற்றம் குறித்து உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம். உங்களுடைய  உரிமைகள் ஒதுக்கீட்டாளரால் பராமரிக்கப்படும் என்று இந்த விதிகளின் படி நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். நீங்கள்  உரிமை மாற்றத்திற்கு உடன்படவில்லை என்றால், உங்களுடைய விருப்பத்தின் படி தளத்தை உபயோகப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் தளத்தைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினால், நீங்கள் உரிமை மாற்றத்தை  ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

(b)  அறிவிப்புகள். நாங்கள் உங்களுக்கு அறிவிப்பைத் தளத்தில் உள்ள பொது அறிவிப்பு வாயிலாக அல்லது எங்களுடைய பதிவில் இருக்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னணு அஞ்சல் வாயிலாகவோ அல்லது எங்களுடைய பதிவில் இருக்கின்ற உங்கள் முகவரிக்கு பொதுவாக அஞ்சல் மூலம் எழுத்துப்பூர்வமாகவோ வழங்கலாம்.

(c)  தீவிரத்தன்மை. இந்த விதிகளின் படி எந்தவொரு ஒதுக்கீடும் பலனில்லாமல் இருந்தால், தகுந்த எந்தவொரு சட்டத்தின் கீழும் சட்டவிரோதமாகவோ அல்லது செயல் படுத்த முடியாததாகவோ, மீதமுள்ள விதிகளின் செல்லுபடியாகும் தன்மை, சட்டப்பூர்வமான தன்மை மற்றும் செயல்முறைப்படுத்துதல் போன்றவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது, தொடர்ந்து பயன்படுத்தலாம்.

(d)  மொழி. இந்த விதிமுறைகளில் அசல் உரை ஆங்கிலத்தில் இருக்கின்றது. எந்தவொரு அயல்நாட்டு மொழியில் மொழிபெயர்ப்புக்கும் ஆங்கில உரைக்கும் இடையில் ஏதேனும் மாறுபட்ட நிலை ஏற்பட்டால், ஆங்கில உரையில் உள்ளதே மேலோங்கி இருக்கும்.

 

13.  எழுதப்பட்ட ஒப்பந்தம் இந்த விதிமுறைகளை மீறும்

நீங்கள் தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்துவதற்கு பொதுவாக இந்த விதிமுறைகள் பொருந்தும். எனினும், உங்களுடன் நாங்கள் எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை செய்துள்ளோம் அல்லது உங்களுடன் அது போன்ற விதிமுறைகளை எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்ட நிலையில், ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அது போன்ற ஏதேனும் கருத்து வேறுபாட்டைச் சரி செய்ய முற்படும்போது, அத்தகைய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் அல்லது எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டவை பொருந்தும்.

 

14.  நிர்வாகச் சட்டம்

இந்த விதிமுறைகள் பகுதியின் சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் உருவாக்கப்படும்.

 


 

அட்டவணை

 

B.  நீதித்துறை சிறப்பு ஏற்பாடுகள் – இந்தியா

1.  வரையறைகள்

உள்ளூர் செயல்முறை இணைப்பு” என்றால் GoGoVan India Private Limited; மற்றும்

வலைத்தளம்” என்றால் www.gogox.com/in.

 

2.  தளம் மற்றும் சேவைகளின் உங்களின் உபயோகம்

தொந்தரவு, கோபமூட்டுதல் அல்லது சிரமத்தை ஏற்படுத்த நீங்கள் தளம் மற்றும் / அல்லது சேவைகளை உபயோகப்படுத்த   மாட்டீர்கள் என்பதை நீங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆப்பில் தகவல்தொடர்புகள் அல்லது தரவு அல்லது விவரங்களை  அளிக்கும்போது, ​​எந்தவொரு தரவையும் அல்லது விவரங்களையும் நீங்கள் அறிவிக்கவோ, காட்டவோ, பதிவேற்றவோ,  திருத்தவோ, வெளியிடவோ, அனுப்பவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது – அ) வேறொரு நபருக்கு சொந்தமானது,  உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது; ஆ) மிகவும் தீங்கு விளைவிக்கும், துன்புறுத்தும், கொச்சை வார்த்தைகள்,  அவதூறான, கீழ்த்தரமான, ஆபாசமான, பீடோபிலிக், கேவலமாகப் பேசுதல், மற்றொருவரின் தனியுரிமையை கையகப்படுத்தும்,  வெறுக்கத்தக்க, அல்லது இனரீதியாக, எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய, இழிவுபடுத்தும், பணமதிப்பிழப்பு அல்லது சூதாட்டத்தை ஊக்குவித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் சட்டவிரோதமானது; இ) எந்த விதத்திலும் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; ஈ) எந்தவொரு காப்புரிமை, வர்த்தக முத்திரை, பதிப்புரிமை அல்லது பிற தனி உரிமைகளை மீறுகிறீர்கள்; உ)  நடைமுறையில் இருக்க கூடிய எந்தவொரு சட்டத்தையும் மீறுகிறது; ஊ) அது போன்ற செய்திகளில் தோற்றம் குறித்து  தவறான விவரங்களை அளிக்கிறது அல்லது இயல்பாகவே மிகவும் இடரான அல்லது அச்சுறுத்தும் எந்தவொரு தகவலையும்  தொடர்புகொள்கிறது; எ) வேறொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது; ஏ) எந்தவொரு கணினியின் தரவுகளின்  செயல்பாட்டில் குறுக்கிட, நீக்க அல்லது கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மென்பொருள் வைரஸ்கள் அல்லது வேறு எந்த கணினி  குறியீடு, கோப்புகள் அல்லது நிரல்கள் இருக்கின்றன; அல்லது; ஐ) பிராந்தியத்தின் ஒற்றுமை, நேர்மை, பாதுகாப்பு, இடர்காப்பு  அல்லது ஆதிக்கம் செலுத்துதல், வெளி மாநிலங்களுடனான நட்பு உறவுகள், அல்லது பொது உத்தரவு அல்லது எந்தவொரு  அறிவு சார் குற்றத்தை  தூண்டுவது  அல்லது எந்தவொரு குற்றத்தையும் விசாரணை செய்வதை  தடுப்பது அல்லது வேறு எந்த நாட்டையும் அவமதிப்பதாகும்.

 

3.  கருத்து வேறுபாட்டிற்கான தீர்வு

இந்த விதிகளின் கீழ் ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது ஏதேனும் விஷயம் நிகழ்ந்தால், நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996 மற்றும் நடைமுறையில் இருக்கக்கூடிய காலத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றின் படி இறுதியான தீர்ப்புக்காக  இது போன்ற சர்ச்சையை நடுவர் மன்றத்தில் குறிப்பிடுவதற்கு நீங்களும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த பிரிவில் குறிப்பு  மூலம் இணைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. நடுவர் இருக்கை / இடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியாவிலும், தீர்ப்பாயத்தில்  ஒரு நடுவர் இருக்க வேண்டும். நடுவருடைய மொழி ஆங்கிலமாக இருக்கும். நடுவர் தீர்ப்பானது உங்களுக்கும் எங்களுக்கும்  இறுதியான பிணைப்பு ஆகும். சென்னை நீதிமன்றங்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிப்பதற்கான பிரத்யேக அதிகார  வரம்பு இருக்கும்.

 

 

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 2020